வரத்து குறைவால் மீன்கள் விலை கடும் உயர்வு

வரத்து குறைவால் மீன்கள்  விலை கடும் உயர்வு

மீன் மார்க்கெட்

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை கடும் உயர்வு சீலா மீன் கிலோ 1300 ரூபாய் வரையும். விளைமீன் கிலோ 650 ரூபாய் வரையும், ஊளி மீன் கிலோ 600 ரூபாய் வரையும், சாலை மீன் ஒரு கூடை 3300 ரூபாய் வரையும் விற்பனையானது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு பின்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் இதன் காரணமாக தினேஷ் புறம் நாட்டுப்புறத்தில் இன்று குறைவான படகுகுகளே கரை திரும்பின இதன் காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதாலும் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதாலும் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது ஒரு கிலோ 800 ருபாய் விற்பனையான ஒரு கிலோ சீலா மீன் தற்போது இன்று கிலோ 1300 ரூபாய் வரையும் 400 ரூபாய் விற்பனையான விளைமீன் கிலோ 650 ரூபாய் வரைக்கும் 300 ரூபாய் விற்பனையான ஊளி மீன் கிலோ 600 ரூபாய் வரையும் சாலை ஒரு கூடை 3300 ரூபாய் வரையும் நன்டு ஒரு கூடை 4000 ரூபாய் வரையும் விற்பனையானது மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் விலையை பொறுப்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றனர்

Tags

Next Story