திருச்சி சிவா-துரை வைகோ சந்திப்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ திமுக எம்.பி திருச்சி சிவாவை சந்தித்து ஆதரவு திரட்டினார்
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, திமுக மாநிலங்களவை குழுத் தலைவர், திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி.,வை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் பூமிநாதன், துணைப் பொதுச்செயலாளர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பெல்.இராசமாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story