31 அடி உயர துர்க்கை சுடலை காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
சேலம் மாவட்டம்,ங்ககிரி அருகே 31 அடி உயர நெற்றிக்கண்ணுடை ஸ்ரீ துர்க்கை சுடலை காளியம்மன், ஸ்ரீ பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி சரபங்கா நதிக்கரையில் அமைந்துள்ள 31 அடி உயர ஸ்ரீ துர்க்கை சுடலை காளியம்மன், ஸ்ரீ பெரியாண்டிச்சியம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் முன்னதாக பக்தர்கள் காவேரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பம்பை மேல தாளங்கள் முழங்க தீர்த்தம் எடுத்துக்கொண்டு முக்கிய கிராமங்களின் வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க இரண்டு கால வேள்வி யாக பூஜைகள் நடைபெற்று யாகசாலையில் வைக்கப்பட்ட பூரண கும்பத்தை சிவாச்சாரியார்கள் எடுத்துக்கொண்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து 31 அடி உயர ஸ்ரீ துர்க்கை சுடலை காளியம்மன், ஸ்ரீ பெரியாண்டிச்சியம்மன் சுவாமிகளுக்கு புண்ணிய தீர்த்தம் ஊற்றி, தீபாரதனை காமிக்கப்பட்டு மஹாக கும்பாபிஷேக விழா நடைபெற்று பக்தர்களுக்கு புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபாடு செய்தனர் அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.