துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய குழு  கூட்டம்

ஒன்றியக்குழு கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்டரங்கில் ஒன்றிய குழு சாதாணர கூட்டம் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் உட்கட்டமைப்பு பணிகள், சமையலறை கூடம் மற்றும் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுகாதார பணிகள் மேம்படுத்துதல் பணிகள், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க நடுநிலை மற்றும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கழிவறைகள், வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மையாக பார்ப்பதற்கும் ,பள்ளிகளில் பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் ஆகிய பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுவருகிறது.

அந்த பணிகள் அனைத்தும் இன்னும் தரமாக அமைக்க வேண்டும் .அதேபோல் பணிகள் அனைத்தும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் பருவ மழை அதிக அளவு பெய்து வருவதால் ,பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் .பருவ மழைகள் அதிக அளவு மழை பெய்வதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ,அவர்கள் பாதுகாப்பிற்கு நாம் அனைவரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். மேலும் கால்வாய் ,ஏரி, குளம் ,குட்டைகள் அனைத்து இடங்களிலும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்க வேண்டும். மேலும் மழை வெள்ளத்தில் பொது மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது .அதற்காக நாம் அனைவரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் ஒன்றியக் குழு துணை தலைவர் உஷாராணி சதாசிவம், ஆணையாளர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) கிருஷ்ணமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் |பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story