கூடுவாஞ்சேரி அருகே துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

கூடுவாஞ்சேரி அருகே துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

துரியோதனன் படுகளம்

கூடுவாஞ்சேரி அருகே கல்வாய் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் அக்கினி வசந்தோற்சவத்தையொட்டி நடந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,கூடுவாஞ்சேரி அருகே கல்வாய் கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் அக்கினி வசந்தோற்சவத்தையொட்டி துரியோதனன் படுகளம் நிகழ்வு நடைபெற்றது. கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வசந்தோற்சவம் தொடங்கியது. இதனை அடுத்து ஆதி பருவம் ஸ்ரீ கிருஷ்ணா் ஜனனமும் அம்மன் பிறப்பும் பாரதச் சொற்பொழிவும் திருவீதி உலாவும் நடைபெற்றன. விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை, பாரத சொற்பொழிவு மகாபாரத நாடகங்களும் சாமி வீதி உலா, கூத்து நடைபெற்றன.

இதன் தொடா்ச்சியாக துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கூடுவாஞ்சேரி, திருப்போரூா், செங்கல்பட்டு, மறைமலைநகா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்வுகளை கண்டு களித்தனா். இதனைத் தொடா்ந்து படுகளத்தில் பாஞ்சாலி தனது சபதத்தை நிறைவேற்றி கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னா் தீ மிதித்தல், வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றன. இரவு அம்மன் வீதி உலாவை தொடா்ந்து சிறப்பு நாடகம் நடைபெற்றது.

Tags

Next Story