ஏகாம்பரர் கோவிலில் வீதி உலாவில் கலந்து கொண்ட ஹாலந்து தம்பதியினர்

ஏகாம்பரர் கோவிலில் வீதி உலாவில் கலந்து கொண்ட ஹாலந்து தம்பதியினர்


காஞ்சிபுரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த ஹாலந்து தம்பதியினர், கிரிவலக் குழுவினருடன் இணைந்து, மாட வீதியில் வலம் வந்தனர்.


காஞ்சிபுரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த ஹாலந்து தம்பதியினர், கிரிவலக் குழுவினருடன் இணைந்து, மாட வீதியில் வலம் வந்தனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை கிரிவலக் குழு சிவத்தொண்டு நற்பணி மன்றத்தினர், மாதந்தோறும் தமிழ் மாத பிறப்பு தினத்தன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு, நான்கு மாட வீதியிலும் பக்தி பாடல்களை பாடி வலம் வருகின்றனர். அதன்படி மாசி மாத பிறப்பையொட்டி, நேற்று காலை, கோவிலில் மன்ற அமைப்பாளர் கங்காதரன் தலைமையில், சிவபக்தர்கள் வழிபாடு நடத்திவிட்டு, பன்னிரு திருமுறை பாடல்களை பாடியபடி மாட வீதியை வலம் வர, கோவிலில் இருந்து புறப்பட்டனர். அப்போது, காஞ்சிபுரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த ஹாலந்து தம்பதியினர், கிரிவலக் குழுவினருடன் இணைந்து, மாட வீதியில் வலம் வந்தனர்.

Tags

Next Story