சாயக்கழிவு நீர் கலப்பு: வார்டு கவுன்சிலர் புகார்

சாயக்கழிவு நீர் கலப்பு: வார்டு கவுன்சிலர் புகார்
X

வார்டு கவுன்சிலர் புகார்


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர நகராட்சி கூட்டமானது இன்று நடைபெற்றது.. நகராட்சி ஆணையாளர் தாமரை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ் துணைத்தலைவர் ப.பாலமுருகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்ட அனுமதி வழங்குவது, 15-வது மத்திய நிதி குழு 2023- 24 இன் கீழ் மீனவர் தெருவிலும் அக்ரஹாரம் காவிரிக்கரை ஓரத்திலும், 83-லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படித்துறை கட்டுதல் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நகராட்சி 6-வது வார்டு மதிமுக கவுன்சிலர் சிவம் அவர்கள் தனது வார்டில் நிலத்தடி நீருக்கு போர் போட்டால், அதில் சாய தண்ணீர் வருவதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வந்தபோதும் நேரில் புகார் கொடுத்துள்ளதாகவும், எனவே இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, தான் கொண்டு வந்திருந்த சாயக் கழிவு நீர் கலந்திருந்த குடிநீர் கேனை ஆதாரமாகக் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது .

இதற்கு பதில் அளித்த நகர் மன்ற தலைவர் ,உரிய ஆய்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட சாயப்பட்டறை ஆலைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 12-வது வார்டு வினோத் அவர்கள் பேசும்பொழுது, பள்ளிபாளையம் பேருந்து நிலையம் ரோட்டில் பாலம் வேலைகள் நடைபெற்று வருவதால், பேருந்துகளை பழைய பெட்ரோல் பங்க் அருகே நிறுத்துவதற்கு பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் அளித்த துணைத்தலைவர் இது குறித்து பலமுறை பேருந்து ஓட்டுனர்களுக்கு தெரிவித்துள்ள போதும் அவர்கள் கேட்கவில்லை .இனி காவலர்களைக் கொண்டு பேருந்துகளை நிறுத்திச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.. இவ்வாறாக கூட்டம் நடைபெற்றது....

Tags

Next Story