திருச்சி விமான நிலையத்தில் இ- சிகரெட்டுகள் பறிமுதல்…!
இந்தியாவில் இ-சிகரெட் தயாரித்தல், விற்பனை செய்தல், ஏற்றுமதி செய்தல், இறக்குமதி செய்தல், அதுதொடர்பான விளம்பரம் வெளியிடுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், கள்ளச்சந்தையில் இ-சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இருந்த போதும் வெளிநாடுகளில் இருந்து கள்ளத்தனமாக கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கோலாலம்பூரில் இருந்து விமானம் ஒன்று திருச்சி வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 பயணிகள் தங்களது உடைமைகளில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.32 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள 1285 இ.சிகெரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.