ராசிபுரம் வட்டத்தில் இணையவழி பட்டா வரைமுறைபடுத்தும் பணி
அதிகாரிகள் ஆய்வு
ராசிபுரம் வட்டத்தில் இணைய வழி பட்டா வரைமுறைபடுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் உமா நேரில் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம், காக்காவேரி, ஆயில்பட்டி, மற்றும் ராசிபுரம் பிற்படுத்தப்பட்டோர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தற்போது வரை இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தப்பட்ட விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Tags
Next Story