இணையவழி வேலை : பெண்ணிடம் ரூ. 7.96 லட்சம் மோசடி
பைல் படம்
தஞ்சாவூரில் இணையவழி வேலை எனக் கூறி பெண்ணிடம் ரூ. 7.96 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண்ணின் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் செயலிகள் மூலம் இணையவழியில் வேலை என்றும், டாஸ்க்குகளை நிறைவேற்றினால் பணம் வழங்கப்படும் எனவும் தகவல் வந்தது. இதை நம்பிய அப்பெண் மர்ம நபர்கள் அனுப்பிய லிங்க் வழியாக பல்வேறு கட்டங்களில் ரூ. 7 லட்சத்து 96 ஆயிரத்து 800 ரொக்கத்தைச் செலுத்தினார். ஆனால், மர்ம நபர் கூறியபடி அப்பெண்ணுக்கு பணம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அப்பெண் தொடர்பு கொள்ள முயன்றும், அழைப்புகளை மர்ம நபர் துண்டித்து விட்டார். இதன் மூலம் மர்ம நபர் தன்னை ஏமாற்றியதை அறிந்த அப்பெண் தஞ்சாவூர் இணையதளக் குற்ற காவல் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story