சேலம் கிழக்கு கோட்ட அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்ட அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

கோப்பு படம் 

சேலம் கிழக்கு கோட்ட அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.

சேலம் கிழக்கு கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் கிழக்கு கோட்ட மின்சார வாரிய இயக்கம், பராமரிப்பு அலுவலகம், உடையாப்பட்டி, காமராஜர் நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகம் மூலம் ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை தோறும் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான (ஜூன்) குறை தீர்க்கும் கூட்டம் உடையாப்பட்டி பகுதியில் உள்ள அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

எனவே கிழக்கு கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள், இந்த முகாமில் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story