சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம்

சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம்

கொடைக்கானல்,ஊட்டி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல வரும் 7- ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொடைக்கானல்,ஊட்டி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல வரும் 7- ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாகும், இங்கு பெரும்பாலும் சுற்றுலா தொழிலையே நம்பி இங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகின்றனர், மேலும் மலைப்பகுதிகளில் நிலவும் இதமான கால நிலையினையும், ரம்யமான சீதோஷ்ண நிலைமையும் கண்டு ரசிக்க வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு தங்கள் பொருளாதாரத்தை அவ்வப்போது மேம்படுத்தி வருகின்றனர், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கொடைக்கானலில் லட்சக்கணக்கான சுற்றுலாபயணிகள் பேருந்துகளிலும், இலகு ரக வாகனங்களிலும், இரு சக்கர வாகனங்களிலும், வருகை புரிவதால் கூட்டம் நிரம்பி மலைப்பகுதி முழுவதும் களைகட்டும், மேலும் இந்த 60 நாட்கள் கோடை சீசனில் தான் போதிய அளவு வருமானம் பார்ப்பது வழக்கம், மேலும் தாங்கள் பிற மாதங்களில் வாங்கிய கடன்களை நேர் செய்யும் சுழலும் ஏற்படும், மேலும் வருடம் தோறும் 10 மாதங்களில் ஓரளவு வருமானத்துடன் சிரமப்பட்டு இந்த 10 மாதங்களை கடந்தால் தான் வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல முடியும், இந்நிலையில் ஊட்டி,கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சீசன் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இதனை தவிர்க்கும் விதமாக நேற்று மாலை வேளையில் சென்னை உயர் நீதி மன்றம் ஊட்டி,கொடைக்கானலில் இ-பாஸ் முறை அமுல் படுத்த மாவட்ட ஆட்சியர் களுக்கு உத்தரவிட்டு உள்ளது, இந்நிலையில் கொடைக்கானலுக்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களிடம் இது குறித்து கேட்ட போது சீசன் காலங்களில் நடைமுறை படுத்தப்படும் இ பாஸ் நடைமுறை யால் சிறு தொழில் புரிவோர் உள்ளிட்ட சுற்றுலா தொழில் புரிவோர் அனைவரும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் நலிவடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதே போல் வாகனம் நிறுத்தும் இடம்,சாலைகளை அகலப்படுத்துதல், மாற்று சாலை அமைத்தல், மேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தினால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், இதே போன்று போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதலாக போக்குவரத்து காவலர்களை பணியில் ஈடுபடுத்தினால் போக்குவரத்து சீராகும் என்றும் இ-பாஸ் முறை அமுல் படுத்தினால் சமானிய மக்கள் வந்து செல்வதில் சிரமம் இருப்பதாலும், தற்போது இந்த இ-பாஸ் முறை தேவையில்லை என சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story