பொது சேவை மைய கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

பொது சேவை மைய கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

பணம் கொள்ளை 

பள்ளிபாளையம் சங்கிகிரி சாலையில் பொது சேவை மையம் கடையின் பூட்டை உடைத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் மாதேஸ்வரன் கோவில் பஸ் ஸ்டாப் என்ற பகுதி அருகே சாந்தி பிரியா என்பவர் இ பொது சேவை மையம் கடையை நடத்தி வருகிறார். இந்த கடையில் பண பரிவர்த்தனை, பேன்சி பொருட்கள் விற்பனை, ஆன்லைன் ரயில்வே விமான டிக்கெட் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்த கடையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல கடையின் உரிமையாளர் சாந்திப்பிரியா நேற்று இரவு 9 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார் . இன்று காலை கடையை திறக்க வந்த பொழுது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் . மேலும் கடையின் உள்ளே சென்று பார்த்த போது கடையின் கல்லாவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வாடிக்கையாளரிடம் வாங்கி வைத்திருந்த ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை திருடப்பட்டு, கடையினுள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா ஒன்றையும் கழட்டி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு சங்ககிரி சாலையில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் பள்ளிபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story