நில அளவைக்கு இணையவழிச்சேவை: ஆட்சியர் அறிவிப்பு

நில அளவைக்கு  இணையவழிச்சேவை: ஆட்சியர் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் 

தருமபுரி மாவட்டத்தில் நில உரிமையாளர்கள் https://tamilnilam.tn.gov.in/citizen புதிய வசதியை இணையவழிச் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen புதிய வசதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய "எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் "நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதார்ருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் & https://eservices.tn.gov.in/ இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Tags

Next Story