மின்னணு பணப்பரிவர்த்தனை நிதிசார் விழிப்புணர்வு
விழிப்புணர்வு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மின்னணு பணப் பரிவர்த்தனை நிதிசார் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் இளஞ்செல்வி ஆகியோர் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தனர். இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும், அன்றாடம் வழங்கப்படும் அனைத்து வகையான கடன் வழங்குதல், விற்பனை கிடங்கு பயன்பாடு, பொது சேவை மையம், வேளாண் சேவை மையம் மற்றும் அனைத்து சேவைகளின் செயல்பாடுகள், பதிவாளரின் 'டேடா போர்டல்' என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
Next Story