அதிகாலையில் மது விற்பனை - இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்

அதிகாலையில் மது விற்பனை - இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்

டாஸ்மாக்

காங்கேயத்தில் 24 மணிநேரமும் தங்கு தடையின்றி அனைத்து வித டாஸ்மாக் பார்களிலும் மது விற்பனை நடைபெற்று வருவதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது.

காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் பாஜக மாவட்ட துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் திடீரெனெ உள்ளே சென்றார்.அப்போது டாஸ்மாக் பாரில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது கோபாலகிருஷ்ணன் தான் வைத்திருக்கும் செல் போனில் பேஸ்புக் பக்கத்தில் கேமராவை ஆன் செய்து ஆன்லைன் வீடியோவை பகிர்ந்தார். இதனால் கடையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காங்கேயம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அனுமதிக்க படாத நேரத்திலும் டாஸ்மாக் பாரில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் 24 மணிநேரமும் கிடைக்கின்றது என்றார். மேலும் காவல்துறை மற்றும் மதுவிலக்கு துறை கட்டுப்பாட்டில் இருந்த போது 24 மணிநேரமும் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது என்பது தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தெரிந்த ஒன்றே, ஆனால் தற்போது தேர்தல் தேதி அறிவித்த பின்னரும் தமிழகம் முழுவதும் தமிழக தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட நேரத்தில் தங்குதடையின்றி மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு கிடைப்பது மிகவும் எளிதாக கிடைக்கின்றது.

கால்நடை விற்பனையில் ஈடுபடும் விவசாயிகள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து சென்றால் பிடிக்கும் பறக்கும் படைகள் தடைசெய்யப்பட்ட நேரத்தில் மதுவிற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்கமுடியாத என கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்கள் தெளிவாக சிந்தனையுடன் வாக்குச்செலுத்த கூடாது என மது மயக்கத்திலேயே பொதுமக்களை வைத்திருப்பதே இந்த தமிழக அரசு உடைந்தையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கடந்த வாரத்தில் மட்டும் காங்கேயம் டாஸ்மாக் பாரில் குடித்து 3க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்ததாகவும் உடனடியாக தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூடவேண்டும் என கோரிக்கை வைத்தார். பின்னர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைனில் தமிழக தேர்தல் ஆணையத்தின் மீதும் அதிகாரிகள் மீதும் புகார் அளித்துள்ளார்.

Tags

Next Story