மின்சார ஊழியர்களுக்கு முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

மின்சார ஊழியர்களுக்கு முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

மின்சார ஊழியர்கள்

மின்சார ஊழியர்களுக்கு முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியை மேற்பார்வை பொறியாளர் தண்டபாணி வழங்கினார்.
மின்சார கம்பங்களில் ஏறி பணிபுரியும் ஊழியர்களுக்கு (வயர்மேன்கள்) சில நேரங்களில் மின்சாரம் பாய்ந்து விபத்துகள் ஏற்படுகிறது. இது போன்ற விபத்துக்களை தடுக்கும் வகையில் எச்சரிக்கை மணி ஒலிக்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மரவனேரி மின்சார அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மேற்பார்வை பொறியாளர் தண்டபாணி, செயற்பொறியாளர் குணவர்த்தினி ஆகியோர் கலந்து கொண்டு விபத்தை தடுக்கும் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியை வழங்கினர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- மாவட்டத்தில் பணிபுரியும் 450 மின் ஊழியர்களுக்கு மின்சார விபத்தை தடுக்கும் வகையில் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி வழங்கப்பட்டு உள்ளது. இதை கை அல்லது தலைகளில் பொருத்திக்கொண்டு மின் கம்பங்களில் ஏறும் போது ஏதோ காரணங்களால், வயரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தால், 3 அடி தூரத்திற்கு முன்பே எச்சரிக்கை ஒலி எழுப்பும். அப்போது சுதாரித்துக்கொண்டு மேலும் மின் கம்பத்தில் ஏறாமல் விபத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். எனவே ஊழியர்கள் கட்டாயம் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியை பொருத்திக்கொள்ள வேண்டும். கருவியை பயன்படுத்தாமல், மின் கம்பங்களில் ஏறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story