இ.சி.ஆர்., சாலையில் விரிவாக்கப்பணி - 16 வீடுகள் அகற்றம்

இ.சி.ஆர்., சாலையில் விரிவாக்கப்பணி - 16 வீடுகள் அகற்றம்
சாலை விரிவாக்க பணி,வீடுகள் அகற்றம்
மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்து. இதற்காக, 1,270 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக, மாமல்லபுரம் -- முகையூர் இடையிலான 31 கி.மீ., சாலை 675 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், முகையூர் -- மரக்காணம் இடையிலான 31 கி.மீ., சாலை 595 கோடி ரூபாய் மதிப்பிலும், சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்ததாக, மரக்காணம் -- புதுச்சேரி இடையிலான 32 கி.மீ., சாலை மேம்படுத்தப்பட உள்ளது. இச்சாலை திட்டப் பணிகளுக்காக, கடந்த ஆண்டு, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. மாமல்லபுரம் -- முகையூர் இடையேயான 31 கி.மீ., சாலை விரிவாக்கப் பணிக்காக, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பாக உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன் இழப்பீடு வழங்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு, நேற்று கூவத்துார் அருகே உள்ள வேப்பஞ்சேரி கிராமத்தில், சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக இருந்த 16 வீடுகள், பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

Tags

Next Story