எடப்பாடி நகர அதிமுக சார்பில் எம்ஜிஆரின் நினைவு தினம் அனுசரிப்பு

எடப்பாடி நகர அதிமுக சார்பில் எம்ஜிஆரின்  நினைவு தினம் அனுசரிப்பு

எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது 

எடப்பாடி நகர அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அதிமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான அமரர் எம்ஜிஆரின் 36வது நினைவு தினம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் மெழுகு தீபம் ஏற்றி மரியாதை செலுத்தினர். அதிமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான அமரர் எம்ஜிஆரின் 36 வது நினைவு தினத்தை நாடு முழுவதும் உள்ள அதிமுகவினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு அதிமுக நகர செயலாளர் முருகன் தலைமையில் அனைவரும் மெழுகு தீபம் ஏற்றி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது நகர மன்ற முன்னாள் தலைவர் கதிரேசன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

Tags

Next Story