திமுக வேட்பாளருக்கு எடப்பாடி நகரமன்ற தலைவர் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல்

திமுக வேட்பாளருக்கு எடப்பாடி நகரமன்ற தலைவர் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல்
துண்டு பிரசுரங்கள் வழங்கிய நகர்மன்ற தலைவர்
சேலம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு எடப்பாடி நகர மன்ற தலைவர் பாஷா வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து எடப்பாடி நகர மன்ற தலைவர் வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர பிரச்சாரம்... சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் TM.செல்வகணபதியை ஆதரித்து எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான உத்தண்டிக்காடு,தாவாந்தெரு,ஹவுசிங் போர்டு மற்றும் வெள்ளாண்டிவலசு பகுதியில் எடப்பாடி நகர மன்ற தலைவர் பாஷா தலைமையில் திமுக ,

காங்கிரஸ், விசிக என கூட்டணி கட்சி நிர்வாகிகள் கையில் கொடிகளை ஏந்தியபடி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தமிழக முதலமைச்சர் இரண்டு ஆண்டுகளில் செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story