தேசிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி கிடையாது: எடப்பாடி உறுதி

தேசிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி கிடையாது: எடப்பாடி உறுதி

கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி

அதிமுக தலைமையில் பெரிய கூட்டணி அமையும் நிச்சயம் தேசிய கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று தெரிவித்தார்

அதிமுக கொண்டு வந்த பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டமும் கைவிடப்பட்டது. அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களையெல்லாம் கைவிடுவதுதான் திமுக அரசின் சாதனையாக உள்ளது.

அதிமுக பொதுச்செயாலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி சீர்காழியில் பேச்சு. தேசிய கட்சி இல்லாமல் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மார்கோனி தலைமையில் சிறுபான்மையினர் மற்றும் மாற்று கட்சியினர் 3 ஆயிரம் பேர் அதிமுகவில் இணைந்தனர்.

எடப்பாடி பழனிசாமியை சாரட் வண்டியில் ஏற்றி ஊர்வலமாக விழா மேடைக்கு அழைத்து வந்து வரவேற்பளித்தனர். கழக அமைப்பு செயலாளர் ஓ.எஸ்.மணியன், கலந்து கொண்டார். தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி முன்னிலையில் சிறுபான்மையினர் உட்பட 3000 பேர் மாற்று கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க வில் இணைந்தனர்.

கட்சியில் சேர்ந்தவர்களை வாழ்தி வரவேற்று எடப்பாடி கே பழனிச்சாமி பேசியதாவது. அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்களின் நலன் கருதி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. சீர்காழி தலைமையில் புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மீத்தேன் திட்டம் வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் இன்றைய முதலவர் மு.க.ஸ்டாலின். ஆனால் அதை தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு. டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்த நீர் நிலைகளை தூர்வாரும் வகையில் குடிமராமத்து திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தியது. அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அதிகபட்சமாக விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரப்பட்டது. நாட்டிலேயே அதிகபட்சமாக 50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.9,400 கோடி இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரப்பட்டது. கடந்த குறுவை சாகுபடிக்காக முதல்வர் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து வைத்தார். ஆனால் கர்நாடகத்திலிருந்து தண்ணீரை தொடர்ந்து பெற முடியாமல் 3.5 லட்சம் குறுவை பயிர்கள் நீரின்றி காய்ந்து பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையும் பெற்றுத்தர முதல்வர் தவறிவிட்டார். விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. பிரதமர் வீடுகட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிட்டது. மாநில அரசின் வீடுகட்டும் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது. அதிமுக கொண்டு வந்த பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டமும் கைவிடப்பட்டது. அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களையெல்லாம் கைவிடுவதுதான் திமுக அரசின் சாதனையாக உள்ளது. ஆட்சிக்கும் வந்ததும் முதல் கைழுத்திட்டு நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறியவர்கள் அவ்வாறு செய்யவில்லை. பல லட்சம் கையெழுத்துப் பெற்று, அதை சேலம் மாநாட்டு திடலில் வீசிச் சென்றதை பார்த்தோம். ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டு, இன்று அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகமானோர் மருத்துவம் படித்து வருகின்றனர். 3 ஆண்டுகளில் எந்தவொரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை. சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளன. பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிய பின்னர், இஸ்லாமியர்களை அழைத்து கோரிக்கைகள் குறித்து முதல்வர் பேசுகிறார். 3 ஆண்டுகளாக சிறுபான்மையினர்கள் கோரிக்கைகள் குறித்து பேசாதது ஏன்? சிறுபான்மை மக்களுக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டும் என அதிமுக வலியுறுத்தியப் பின்னரே முதல்வர் அழைத்துப் பேசுகிறார். சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளது. திமுக சிறுபான்மை மக்களை ஏமாற்றி வருகிறது. திமுக ஆட்சியில் பேச்சு மட்டும்தான் உள்ளது. செயலில் எதுவும் இல்லை. வரும் மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். காவிரி நீர் உரிமை தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாதுகாக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தை பாதுகாக்க முடியும் என்றார்.விரைவில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் நிச்சயம் தேசிய கட்சியின் கூட்டணி கிடையாது என்றார்.

Tags

Next Story