எடப்பாடி தொகுதியில் திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

எடப்பாடி தொகுதியில் திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

திமுக ஆலோசனை கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் குறித்து இல்லம்தோறும் திமுக ஆலோசனை

எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல், தமிழக முதலமைச்சரின் பிறந்த நாள் விழா, திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி தலைமையில் நடைப்பெற்றது.

அதில், எடப்பாடி தொகுதியின் திமுக தேர்தல் பொறுப்பாளர் பரணி மணி பங்கேற்று வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அப்போது திமுக மாநில, மாவட்ட, எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் ஒன்றிய, நகர, பேரூர் திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story