பா ஜ சொல்வதை எடப்பாடி கேட்கிறார் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

பா ஜ சொல்வதை எடப்பாடி கேட்கிறார் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

பா.ஜ சொல்வதைத்தான் எடப்பாடி செய்கிறார் என தமிழ்நாடு சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நாகர்கோவிலில் தெரிவித்தார்.


பா.ஜ சொல்வதைத்தான் எடப்பாடி செய்கிறார் என தமிழ்நாடு சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நாகர்கோவிலில் தெரிவித்தார்.

தமிழ்நாடு சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்தார். அப்போது நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியின் போது கூறியதாவது:- வரும் பாராளுமன்ற தேர்தல் நியாயமாக நடக்குமா என்ற அச்சம் எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எந்தவித காரணமும் சொல்லாமல் திடீரென தேர்தல் கமிஷனர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமா செய்த கமிஷனரிடம் பேசி மீண்டும் பணியில் அமர்த்த முயற்சிக்காமல், ராஜினாமா உடனடியாக ஏற்று அரசு இதழில் வெளியிட்டு அந்த இடத்தை காலியாக வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

போதை பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் என்பவரை கைது செய்ததை வைத்துக்கொண்டு இந்தியா கூட்டணியும் அதன் பிரதான கட்சி என திமுகவையும் கொச்சைப்படுத்தும் செயல் மிகவும் கவலை அளிக்கிறது. தேர்தல் பத்திரமூலம் காங்கிரஸ் பெற்ற நன்கொடை குறித்த விவரங்களை வெளியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஜாபர் சாதித் தவறு செய்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்கவில்லை. சட்டம் தன் கடமையை செய்யும். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு முன் திமுகவை அவருடன் இணைப்பது உள்நோக்கம் கொண்டது என சந்தேகிக்கிறோம்.

தேர்தலுக்கு முன் தவறான செய்திகளை வெளியிட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களின் நன்மதிப்பை கொடுக்கும் வகையில் செயல்படுகிறார்கள். பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள் போதை மருந்து கடத்தியதில் கைது செய்யப்பட்ட பட்டியல் தரப்பட்டுள்ளது. அதற்காக அவர்களை பாரதிய ஜனதாவுடன் சம்மந்தப்படுத்தி பேச நாங்கள் தயாராக இல்லை.

போதைப்பொருள் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி கவர்னரை பார்த்து புகார் அளிப்பது அவருக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இன்னும் கள்ளத்தொடர்பு இருக்கிறது என்று காட்டுகிறது. இதன் மூலம் பாரதிய ஜனதா சொல்வதை தான் எடப்பாடி செய்கிறார் என தெரிகிறது. என கூறினார். இந்த பேட்டியின் போது அமைச்சர் மனோ தங்கராஜ், எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story