எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் - முத்துமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

ஆத்தூர் முத்து மலை முருகன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திர கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்து மலை முருகன் சுவாமி கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி நீடுடி காலம் வாழ வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த பூஜையில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்து பூஜையில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆத்தூர் ஜெய்சங்கரன், கெங்கவல்லி நல்ல தம்பி, சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் அருண் குமார், சேலம் புறநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட இணைச்செயலாளர் வாசுதேவன் மற்றும் நகர ஒன்றிய கிளைக்கலக்க நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்து பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்கள். முருகன் கோவிலுக்கு சேவல் வழங்கப்பட்டது

Tags

Next Story