எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் பி-டீமாக செயல்பட்டு வருகிறார்: தினகரன்
தினகரன்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள காந்தி சிலை பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அம்மாமக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மணமக்களை வாழ்த்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குகள் அனைத்தையும் விலைக்கு வாங்கும் முயற்சிகளை முறியடிக்கும் விதமாக என்டிஏ கூட்டணியின் சார்பில் பாமகவின் அன்புமணி போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது.
பிரதானமான காவிரி டெல்டா பகுதியில் காவேரி பாசன பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கிறது. மேகதாது பகுதியில் அணை கட்டுவது என கர்நாடகாவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சூளுரைத்து வருகின்றனர். இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸில் கூட்டணி வைத்திருக்கிறார். மு.க.ஸ்டாலின் நினைத்தால் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தியிடம் கர்நாடகா முதலமைச்சர் துணை முதலமைச்சரை நிர்பந்தித்து தமிழகத்திற்கான உரிமைகளை பெறலாம். 40 தொகுதிகளும் பண நாயகம் வெற்றுள்ளது. 300, 500, 1000 ரூபாய் கொடுத்து ஏழை, எளிய மக்களை பலிகடா ஆக்கும் இந்த வெற்றி நேர்மையான வெற்றி அல்ல, தவறான முறையில் பெற்ற வெற்றி. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்துகொண்டு திமுகவின் B டீம்மாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்