அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டம்

தர்மபுரி வள்ளலார் திடலில் அதிமுக பொது செயளாலர் எடப்பாடி பழனிசாமி தர்மபுரியில் நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம்
தர்மபுரி வள்ளலார் திடலில் அதிமுக கட்சியின் தேர்தல் பிரச்சார பொது கூட்டம் நேற்று இரவு எட்டு மணிக்கு நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தர்மபுரி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் அசோகனை ஆதரித்து முன்னாள் முதல்வர் அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகித்தார்.அப்பொழுது பேசிய எடப்பாடி பழனிச்சாமி இந்த தொகுதி ஒரு சவாலன தொகுதி.சில கட்சிகள் (பாமக) இருக்கிறார்கள்.நேரத்திற்கும் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப்ப மாறிவிடுகிறார்கள்.தர்மபுரிமாவட்டம் அதிமுக கோட்டை.அதனால் நமது வேட்பாளரை வெற்றி பெற வைத்து நிருபிக்க வேண்டும். எறும்புகள் .தேனிக்கள் போல சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி செயலாற்றி அவரை வெற்றி பெற வைக்க வேண்டும்.இந்த வெற்றி எவராலும் பெறமுடியாத வெற்றியாகவும் மற்றவர்களுக்கு பாடம் புகட்டும் வெற்றியாக இருக்க வேண்டும்.நாட்டிலே பல்வேறு ஜாதி வகுப்புகள் உள்ளது.அவற்றி்ற்கு இடஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்...ஜாதிவாரி கண்கெடுப்பு நடக்க வேண்டும் என உத்தரவு இட்டதுஅதிமுக .அளை வைத்து அனைத்து ஜாதியினருக்கும் பாதிப்பு இல்லாமல் கண்கெடுப்பு செய்ய GO போட்டதுதான் அதிமுக அரசு.அதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றினோம். ஆனால் அவர்கள் மதவாதகட்சிகளிடம் கூட்டணி வைத்துள்ளார்கள்.ஜாதிவாரி கண்கெடுப்பு நடத்த மாட்டோம் என கூறும் மத்திய கட்சியிடம் கூட்டணி வைத்துள்ளார்கள். அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்கள்.ஆனால் சிறப்பாக ஆட்சி செய்தோம்.தைரியம் இருந்தால் ஒரே மேடையில் விவாதம் செய்யலாம்.மக்கள் பெற்ற திட்டங்கள் அனைத்தும் துண்டு சீட்டு இல்லாமல் பேசுவோம். தவறான செய்திகளை திருப்பி திருப்பி சொல்லி அதை உண்மையாக்கலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். 2021ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் 520 திட்டங்கள் நிறைவற்றுவோம் கூறினீர்கள்.ஆனால் நிறைவற்வில்லை. பொய் சொல்வதில் உங்களுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம். இவர்கள் ஆட்சியில் கொலை கொள்ளை கற்பழிப்பு.பெண்களுகம் பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நட்கிறது. நம் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகி விட்டார்கள். அவர்கள் குடும்பம் நடுத் தெருவிற்க்கு வந்து விடும் நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சதுரங்க வேட்டை படத்தில் வரும் டயலாக் ஒருவரை ஏமாற்ற வேஏ்டும் எனில் அவரின் ஆசயை தூண்டவேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார்.தேர்தல் அறிக்கையில் 520 அறிக்கைகள் கூறினார்கள். மாதம் ஒருமுறை மின்கட்டணம்.கல்வி, கடன்ரத்து .சொத்து வரி உயர்வு,மின்கட்டணம் உயர்வு என மக்கள் விரோத ஆட்சி செய்கிறது. சிமென்ட் செங்கல்,கம்பி ஜல்லி விலை உயர்வு, திமுக ஆட்சியில் உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சி கொரனா காலத்தில் வருவாய் இல்லாம் 40ஆயிரம் கோடி.செலவு செய்து மக்களின் உயிர்களை காப்பாற்றியது.கூட்டு குடிநீர்திட்டங்கள் பலவற்றை நிறைவறே்றி தந்துள்ளோம். ஆனால் திமுக அரசு அதிமுக எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என பொய்பிரச்சாரம் செய்துவருகின்றனர். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என கூறிபிரச்சாரத்தை முடித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் நகர கழகச் செயலாளர் பூக்கடை ரவி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கழக விவசாய அணி செயலாளர் டி ஆர் அன்பழகன் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story