எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் - அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

கஞ்சனூரில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

தஞ்சாவூர் மாவட்டம், நவகிரக ஸ்தலங்களில் சுக்கிர பகவானுக்குரிய ஸ்தலமான கஞ்சனூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.கே. பாரதிமோகன் தலைமையில் சுக்கிர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை செய்யப்பட்டது. பின்பு பிரம்மாண்ட கேக் வெட்டி பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் ராஜேந்திரன், தேப்பெருமாநல்லூர் ஊராட்சி பொறுப்பாளர் கேபிள் குமரன் அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன் ஒன்றிய கழகப் பொருளாளர் சாமிநாதன் ஒன்றிய பாசறை செயலாளர் கணேஷ் குமார் திருப்பனந்தாள் நகர செயலாளர் மூர்த்தி திருநீலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் குமரவேலு ஆடுதுறை காமேஷ் வீரமார்த்தாண்டன் கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சிங்காரவேலு உமா சிங்காரவேலு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் துகிலி சிவா மாவட்ட ஐடி வின் துணைச்செயலாளர் பிரபு ஒன்றிய ஐடி வின் செயலாளர் மதன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்

Tags

Next Story