எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்:  கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

மாவட்ட செயலாளர்

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) 70-வது பிறந்தநாள் ஆகும். இதனை முன்னிட்டு சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கட்சி நிர்வாகிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜாகீர்அம்மாபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் நாளை காலை 9 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. எனது தலைமையில் நடக்கும் இந்த பூஜையில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணியினர் கலந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பெயரில் சிறப்பு அர்ச்சனையும், அவர் மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டியும் பூஜை நடத்தப்படுகிறது. பின்னர் கோவிலில் சுமார் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாளை மாலை 6 மணிக்கு சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் பெயரில் சிறப்பு அர்ச்சனையும், அதன்பிறகு தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடும் நடக்கிறது. பின்னர் கோவிலில் சுமார் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை எனது தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகளில் மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட 60 வார்டுகளில் இருந்து பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story