எடப்பாடி பழனிச்சாமி வாகனத்தின் மீது செருப்பு வீச்சு

எடப்பாடி பழனிச்சாமி வாகனத்தின் மீது செருப்பு வீச்சு

எடப்பாடி பழனிசாமி


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிச்சாமி நேற்று காலை வந்தார். அப்போது 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு விவகாரம், சசிகலாவுடனான மோதல் போக்கு உள்ளிட்டவை காரணமாக முக்குலத்தோர், கே.பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ளதால், அபிராமத்தில் அவரது காரை சிலர் மறித்து ஒழிக கோஷம் எழுப்பினர். பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அங்கிருந்து அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பசும்பொன் நினைவிடத்திற்கு வந்ததும் மரியாதை செய்ய வரிசையில் நின்றபோது இளைஞர்கள் சிலர் எடப்பாடி ஒழிக, சசிகலாவிற்கு துரோகம் செய்த இபிஎஸ் வெளியேறு என கூச்சலிட்டனர். அப்போது கே.பழனிச்சாமியுடன் வந்திருந்த முன்னாள் அமைச்சர்களுக்கும், கோஷமிட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

அங்கிருந்த போலீஸார் நினைவிட கேட்டை பூட்டி, கோஷமிட்டவர்களை அப்புறப்படுத்தி, பத்திரமாக மீட்டு வெளியே அனுப்பினர். பின்னர் செய்தியாளர் சந்திப்பு முடிந்து வெளியே செல்லும் போது, பசும்பொன் தெப்பக்குளம் அருகே பழனிச்சாமி காரை நோக்கி சிலர் செருப்பை வீசினர். தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஒருவர் கற்களை வீசினர். பிரச்சினையில் ஈடுபட்டவர்கள் போலீஸார் அழைத்துச் சென்றனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது.

கே. பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விழாவை அரசு விழாவாக அறிவித்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். து. தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்தவர். எம்பி, எம்எல்ஏ என ஒரே நேரத்தில் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் செல்வாக்க நிரூபித்தவர் தேவர். தேவர் திருவுருவ படத்தை சட்டப்பேரவையில் எம்ஜிஆர் திறந்து வைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 13.500 கிலோ தங்க கவசத்தை தேவருக்கு அணிவித்தும், சென்னை நந்தனத்தில் தேவர் சிலை அமைத்தும் மரியாதை செய்தார். சென்னை நந்தனத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சிலை அமைக்கப்பட்டது என தெரிவித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், அன்வர்ராஜா, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், காமராஜ், கோகுல இந்திரா, ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன், செந்தில்நாதன் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story