எடப்பாடியார் பிறந்த நாள்: தயாராகும் விராலிமலை தொகுதி நிர்வாகிகள்

எடப்பாடியார் பிறந்த நாள்: தயாராகும் விராலிமலை தொகுதி நிர்வாகிகள்

எடப்பாடி பழனிச்சாமி 

எடப்பாடியார் பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாட தயாராகும் விராலிமலை தொகுதி கழக நிர்வாகிகள்.

மே 11 விராலிமலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர் , மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி.K.பழனிசாமி அவர்களது 70 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நாளை வர உள்ளதை முன்னிட்டு,

முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் MBBS.,MLA அவர்கள் தலைமையில் நாளை விராலிமலை சட்டமன்றத் தொகுதி சார்பில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்வுகள்:- நாளை (12.05.2024) காலை 11.00 மணியளவில், விராலிமலை அருள்மிகு ஶ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் எடப்பாடியார் பெயரில், சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானம் வழங்கி, பின்னர் விராலிமலை கடைவீதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் நீர்,மோர்,சர்பத்,பழங்கள் வழங்க உள்ளனர்.

அதனை தொடர்ந்து, CVB அறக்கட்டளை, மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் விராலிமலை RKS காம்ப்ளக்ஸில் நடைபெற உள்ளது. அது சமயம் கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக வருகை தந்து நிகழ்வுகளை சிறப்பிக்குமாறு விராலிமலை சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story