ராஜபாளையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி விழிப்புணர்வு பேரணி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்பந்தபுரம் மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் இருந்து 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி சார்பில் இஸ்லாமிய மாணவ மாணவிகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாகவும் கல்வி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி அரசு பொதுத் தேர்வை எவ்வாறு கையாள வேண்டும் மாணவ மாணவிகள் புரிந்து செயல்பட வேண்டும் என பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து பேரணி நடைபெற்றது.
இந்த பேரணிக்கு மாவட்ட தலைவர் முஹம்மதுசபீக் தலைமை வகித்தார் இந்த பேரணி சம்மந்தபுரம் பகுதிகளில் ஊர்வலமாக வந்து பெரிய பாலம் அருகே முடிவடைந்தது.
Next Story