இலக்கை அடைய தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் தேவை     

இலக்கை அடைய தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் தேவை       

கட்டிட திறப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் 64 ஆவது ஆண்டு விழா மற்றும் புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழாவில் முதன்ம கல்வி அலுவலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் 64 ஆவது ஆண்டு விழா, கலை விழா மற்றும் புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் புதிய அலுவலக அறையை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். தலைமை ஆசிரியை அறையை கோவில்பட்டி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயப் பிரகாஷ் ராஜன், மற்றும் செயலர் அறையை சென்னை உறவின் முறை பொதுச் செயலாளர் சொர்ணமாரிப் பாண்டியன், ஆசிரியர்கள் அறையை சென்னை உறவின்முறை தலைவர் திராவிடமணி நாடார், ஆசிரியைகள் அறையை மேனாள் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தெய்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

பின்னர் நடந்த பள்ளியின் ஆண்டு விழா உறவின்முறைத்தலைவர் காசிராஜன், பள்ளிக்குழுத் தலைவர் தங்கமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து 2023-ம் ஆண்டு நடை பெற்று வகுப்பு 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கும்,100% தத்தம் பாடங்களில் எடுத்த ஆசிரியர்களுக்கும், 100% தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கும், +2 வரலாறு மற்றும் பொருளியல் பாடங்களில் 100% எடுத்த மாணவர்களுக்கு துணை நின்ற ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பரிசுகளை முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி வழங்கி பாராட்டி பேசினார்.

Tags

Next Story