பாகல்மேடு அருகே அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

பாகல்மேடு அருகே அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

பாகல்மேடு அருகே அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அடுத்த பாகல்மேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ வர சக்தி விநாயகர் கோவில் அறக்கட்டளையும், ரோட்டரி கிளப் ஆப் போர்ட்டு சிட்டியும் இணைந்து பூண்டி மற்றும் எல்லாபுரம் ஒன்றியத்தில்,

உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 7 மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீ வர சக்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை செயலாளர் டி.கண்ணன் திவ்யா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.முன்னதாக கே.தேஜஸ்வினி அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரியன்கள் முத்துசாமி, ரவிச்சந்திரன், ஸ்ரீ ராமன் மற்றும் ராஜீவ், மாதவன் ஆகியோர் கலந்துகொண்டு 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 7 மாணவ மாணவிகளுக்கு ரூ1000 ஊக்கத் தொகையும் நோட்டு புத்தகங்கள் வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

இதனை தொடர்ந்து 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் 134 மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கனிமொழி, சாரதா ஸ்ரீ மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் கே.தேஜஸ் ஸ்ரீ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story