திண்டுக்கலில் கல்விக் கடன் வழங்கும் முகாம்
மாவட்ட ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோந்த மாணவா்கள் உயா் கல்வி பெறுவதற்கு உதவும் வகையில் கல்விக் கடன் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) சாா்பில் கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ஏழை மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும், பின்தங்கிய பொருளாதார நிலை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் இடைநிற்றலைத் தடுக்கவும், மாநில அரசுகள் சாா்பில் வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கலைக் கல்லூரி, தொழில்நுட்பம், வேளாண்மை, மருத்துவம், இதர தொழில் படிப்புகளுக்கும் தகுதி வாய்ந்த அனைத்து நபா்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படும். மாணவா்களின் படிப்புச் செலவு, புத்தகம், கணினி வாங்குதல், விடுதி, உணவு வசதிக்கு தேவையான நிதி உதவி கணக்கிடப்பட்டு அதிகபட்சம் ரூ.7.50 லட்சம் வரை எவ்வித பிணையமும் இல்லாமல் கடனுதவி வழங்கப்படும் என்று கூறினார்.