திருவாரூர் மாவட்டத்தில் கல்வி கடன் முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் கல்வி கடன் முகாம்
X

ஆட்சியர் சாருஸ்ரீ 

திருவாரூர் மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி மன்னார்குடியில் கல்வி கடன் முகாம் நடைபெறுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பிப்ரவரி 15ஆம் தேதி அன்று மன்னார்குடி ஏ ஆர் ஜே பொறியியல் கல்லூரியில் காலை 10 மணி முதல் கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது . கல்வி கடன் முகாமில் அனைத்து வங்கியாளர்கள் கலந்து கொண்டு கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . முகாமில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் அவர் தம் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story