மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட்ட மாணவர்கள் - கல்விதுறை அதிகாரிகள் விசாரணை

மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட்ட மாணவர்கள் - கல்விதுறை அதிகாரிகள் விசாரணை

மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட்ட மாணவர்கள் 

மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட்ட மாணவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர் கள் படித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 3 மாணவர்கள், பிளஸ்-1 மாணவர் ஒருவர் என 4 மாணவர்கள் மதுபோதையில் வந்து பள்ளியில் இருந்த ஆசிரியர்களை தகாத வார்த்தையால் திட்டி, பாடம் நடத்த விடா மல் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை சேதப்படுத்தி, கற்களை வீசியும், கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல் லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 மாணவர்கள் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், ஒருவர் உளுந்தூர்பேட்டை சிறைச்சாலையிலும் உள்ளனர், இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி பேரங்கியூரில் உள்ள பள்ளிக்கு சென்றார். தொடர்ந்து அவர் நடந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். இதன் விசாரணை அறிக்கை ஓரிரு நாளில் விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Tags

Next Story