மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி சுற்றுலா

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி சுற்றுலா

கல்வி சுற்றுலா

இந்தாண்டுக்கான கல்வி சுற்றுலாவை, மாவட்ட கலெக்டர் வளாகத்தில், கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் ஆறு வயதுடைய காது கேளாத, வாய் பேசாத, புற உலக சிந்தனையற்ற குழந்தைகளை ஒரு நாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கல்வி சுற்றுலாவை மாவட்ட கலெக்டர் வளாகத்தில், கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு மையங்களைச் சேர்ந்த, 40 மாற்றுத்திறனாளி குழந்தைகள், அவர்களது பெற்றோருடன் அழைத்து செல்லப்பட்டனர். காஞ்சிபுரத்திலிருந்து சென்னை மெரினா கடற்கரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி வழியனுப்பி வைத்தார்.

Tags

Read MoreRead Less
Next Story