வையாபுரி குளத்தில் கலக்கும் கழிவுநீர்
வையாபுரி குளத்தில் கலக்கும் கழிவுநீர்
பழநி வையாபுரி குளத்தில் நகர் பகுதி சாக்கடை நீர் கலப்பதாலும், அமலை செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளதாலும் இதன் நீரை நம்பி உள்ள விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். பழநி வையாபுரி குளம் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது. குளத்தின் அருகே பஸ் ஸ்டாண்ட், திரு ஆவினன்குடி கோயில், காந்தி மார்க்கெட் உள்ளன. இந்த குளம் மூலம் பல நுாறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்குள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. தற்போது நகரில் சாக்கடை நீர் கலந்து குளம் மாசடைந்துள்ளது. குளத்தில் அமலைச் செடிகளும் ஆக்கிரமித்துள்ளது.குளத்தின் கரைப்பகுதிகளில் குப்பை கொட்டப்படுவதால் கொசு தொல்லையால் நோய் தொற்று ஏற்படுகிறது. இதனை தடுக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story