ராமநாதபுரத்தில் கட்சி கொடிகள் அகற்றம்

ராமநாதபுரத்தில் கட்சி கொடிகள் அகற்றம்

கட்சி கொடிகள் அகற்றம்

அரசியல் கட்சி விளம்பரங்கள் கட்சி கொடிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.

அரசியல் கட்சி விளம்பரங்கள், கட்சி கொடி ஆகியவற்றை அந்தந்த அரசியல் கட்சியினர் தாமாக முன் வந்து அகற்றிட அனைத்துக்கட்சியினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை பின்பற்றாத அரசியல் கட்சிக்கொடிகளை அந்தந்த பகுதி அரசு அலுவலர்கள் உதவியாளர்களை கொண்டு அகற்றி வருகின்றனர்.

இதேபோல் நரிப்பையூர் பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், கொடிக்கம்பங்களை நரிப்பையூர் கிராம நிர்வாக அலுவலர் மாரிப்பாண்டி தலைமையில், ஊராட்சி மன்ற அலுவலர்கள் அகற்றினார்கள்.

என்றாலும் சில இடங்களில் அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு கொடுக்காத அரசியல் தொண்டர்கள் அரசு அதிகாரிகளை தடுப்பதால் மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கேடு நிலவும் சூழ்நிலையும் உள்ளதால் காவல் துறை ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலரான முன்னாள் இராணுவ கேப்டன் புவனேந்திரன் கூறும்போது, "தேசத்தின் நலன்கருதி தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமே அல்லாமல் அரசியல் கட்சியினரின் கவர்ச்சிகர சுவர் விளம்பரங்களுக்கு வாக்களிக்க போவதில்லை. ஆகவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சியினர் மட்டுமல்ல நாமும் பின்பற்ற வேண்டும்.

ஏனென்றால் உலகை சுருக்கி உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிட்டது விஞ்ஞான வளர்ச்சி. ஆகவே நேர்மையான தலைவர்களை குட்டிச்சுவர்களில் உள்ள விளம்பரங்களில் தேடும் நிலையில் இன்றைய சமூகத்தில் யாரும் இல்லை. ஆகவே ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் நேர்மையான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் தலையாய கடமை நமக்கு உள்ளது என்றார்.

Tags

Next Story