பறவை காய்ச்சல் எதிரொலி; காஞ்சியில் முட்டை விலை சரிவு !

பறவை காய்ச்சல் எதிரொலி; காஞ்சியில் முட்டை விலை சரிவு !
X

முட்டை விலைசரிவு

பறவை காய்ச்சல் எதிரொலியால் காஞ்சிபுரத்தில் ஒரு முட்டை 6.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், முட்டை ஒன்றுக்கு 1.10 ரூபாய் விலை குறைந்துள்ளது.
நாமக்கல், ஈரோடு, சித்துார் வட்டாரத்தில் உள்ள பண்ணைகளில் கொள்முதல் செய்யப்படும் முட்டை, காஞ்சிபுரத்தில் உள்ள மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் விற்கப்படுகின்றன. கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் ஒரு முட்டை 6.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், முட்டை ஒன்றுக்கு 1.10 ரூபாய் விலை குறைந்துள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முட்டை மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கடை உரிமையாளர் ஆர்.மகேஷ்குமார் கூறியதாவது: ஆந்திராவில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் காரணமாக வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கடந்த மாதம் ஒரு முட்டை 6.40 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது, முட்டை ஒன்றுக்கு 1.10 ரூபாய் குறைந்து, 5.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story