உளுந்த வடையில் உயிரிழந்த எட்டுக்கால் பூச்சி - உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உளுந்த வடையில் உயிரிழந்த எட்டுக்கால் பூச்சி - உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உளுந்த வடையில் உயிரிழந்த எட்டுக்கால் பூச்சி! 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் செல்லும் பாதையில் சாலையோர தேநீர் கடைகள் உள்ளன. இந்த கடைகளின் வெளிவளாகத்தில் சூடான இட்லியோடு, வடை வகைகளும், சட்னி -சாம்பாருடன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் கிராமத்து வாசிகளும், தொழிலாளர்களும் இந்த தேனீர் கடைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் விதவிதமான வடைகளுடன் தேநீர் அருந்தி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். வாடிக்கையாளர் ஒருவர் தான் வாங்கிய வடையை சாப்பிடுவதற்காக பிரித்துபார்க்கும் போது வடையினுள்ளே சுருங்கியபடி கருகி இறந்த நிலையில் எட்டுக்கால் பூச்சி (சிலந்தி வகை பூச்சி) இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தஅவர் இதுபோன்று பலமுறை இந்த தேநீர் கடையில் இது போன்று நடப்பதாகவும், சுகாதாரம் இன்றி உணவுப் பொருட்களை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம் சுமத்தி, வருமானம் ஒன்றையே குறியாக வைத்து செயல்படும் கடையின் உரிமையாளரிடம் சுகாதாரம் குறித்தோ, உணவுப் பொருள்களில் இறந்த நிலையில் கிடக்கும் பூச்சிகள் குறித்தோ புகார் கூறினால் பொறுப்பின்றி பதில் கூறுவதாக தனது வீடியோவில் பேசிப் பதிவு செய்து அதனை இணையதளத்தில் வைரலாக பரப்பியுள்ளார். இந்தப் பிரச்சனையில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags

Next Story