வாள்நெடுங்கண்ணியம்மன் திருக்கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை
வாள்நெடுங்கண்ணியம்மன் திருக்கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை
தரங்கம்பாடி அருகே அருள்மிகு வாள்நெடுங்கண்ணியம்மன் உடனுறை தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை வெகு விமர்சையாக நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில், வாள் நெடுங்கண்ணி உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முற்கால சோழ மன்னர்களின் ஒருவரும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவருமான கோச்செங்கட் சோழ மன்னனால் அமைக்கப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்றான இக்கோவிலில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றிஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவிலில், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பூஜை நடைபெற்று வந்தது, இந்த பூஜையின் 100 நாள் நிறைவு பெற்றதை முன்னிட்டு ,ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. முன்னதாக ,சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏகதின லச்சஅர்ச்சனை நடைபெற்றது காலை முதலே ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Next Story