ஏலகிரி மலை டெம்போ ட்ராவலர் விபத்து: 13 பேர் காயம்!

ஏலகிரி மலை டெம்போ ட்ராவலர் விபத்து: 13 பேர் காயம்!

ஏலகிரி மலைக்கு டெம்போ ட்ராவலர் முலம் சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தினர், 12வது கொண்டை ஊசி வளைவு தடுப்புச் சுவர் மீது மோதியதில் 13 பேர் காயமடைந்தனர்.


ஏலகிரி மலைக்கு டெம்போ ட்ராவலர் முலம் சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தினர், 12வது கொண்டை ஊசி வளைவு தடுப்புச் சுவர் மீது மோதியதில் 13 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு டெம்போ ட்ராவலர் முலம் சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தினர்! 12வது கொண்டை ஊசி வளைவு தடுப்புச் சுவர் மீது மோதியதில் 13 பேர் காயம்! திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி!* சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த செல்வமணி குடும்பத்தினர் 13 பேர் ஆவடி பகுதி சேர்ந்த சொக்கலிங்கம் என்ற டிரைவரின் டெம்போடிராவலர் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் சுற்றுலாவுக்காக வந்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென பன்னிரண்டாவது கொண்டை ஊசி வளைவில் டெம்போ டிராவலர் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த சுப்பிரமணி, செல்வமணி, தனுஸ்ரீ, பானுமதி, ராஜேஷ், சாம்ரீஸ், ஆனந்த், தெய்வக்கணி, முகிலிஸ்வரன், பிரதீஷ், சமயந்திரன், ராஜீ, சொக்கலிங்கம், உள்ளிட்ட 13 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன இந்த நிலையில் அவளியாகச் சென்ற சுற்றுலாப் பயணிகள் 108 ஆம்புலன்ஸிக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் பட்டவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். காயம் பட்டவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஏலகிரி மலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் டெம்போ டிராவலர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story