வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

உயிரிழப்பு 

கள்ளக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த சவேரிபாளையத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி, 70; மனநிலை பாதிக்கப்பட்ட இவர், கடந்த 27ம் தேதி அதிகாலை 4:00 மணியளவில் கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் மேம்பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி அந்தோணிசாமி சம்பவ இடத்தில் இறந்துகிடந்தார். தகவலறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story