பயன்படுத்தப்படாத கட்டிடத்தில் முதியவர் சடலம் மீட்பு
விருதுநகர் சிவகாசி சாலையில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் பாண்டியராஜ். இவர் நேற்று பணியில் இருந்த போது விருதுநகர் சிவகாசி சாலையில் பயன்படுத்தப்படாத பழைய கட்டிடத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடைப்பதாக தகவல் வந்துள்ளது. இதை அடுத்து அங்கு சென்று அவர் பார்த்துவிட்டு அது குறித்து ஆமத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த ஆமத்தூர் காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்பு இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story