சுசீந்திரம் தெப்பக்குளத்தில் முதியவர் சடலமாக மீட்பு

X
முதியவர் சடலம்
சுசீந்திரம் தெப்பக்குளத்தில் முதியவர் சடலமாக மீட்பு. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம், பாரதி தெருவை சேர்ந்தவர் சொரி முத்து (75). பிளம்பர் வேலை செய்து வந்தார். இவர் மனைவி வள்ளியம்மாளுடன் மகன் மணிகண்டன் என்பவர் பராமரிப்பில் இருந்து வந்தார். சொரிமுத்து தினமும் காலை 5 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்புள்ள கடையில் டீ குடித்துவிட்டு பின்னர் வீட்டுக்கு திரும்புவது வழக்கம். அது போல் நேற்றும் காலை ஐந்து மணிக்கு டீ குடித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் சொரிமுத்து வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து மகன் மணிகண்டன் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தில் முதியவர் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனே போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் சடலமாக மிதந்தது சொரிமுத்து என்பது தெரிய வந்தது. இதை அடுத்து சடலம் மீட்கப்பட்டது. மகன் மணிகண்டன் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் தந்தை சொரிமுத்து தெப்பக்குளத்தில் குளிக்க சென்ற போது தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
