முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
காவல்துறை விசாரணை
சாலையோரமாக மாயங்கிய நிலையில் கிடந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலபூதக்குடி பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத 70 வயது முதியவர் சாலையோரமாக மாயங்கிய நிலையில் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் லெட்சுமி காந்தனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு நேரில் சென்ற லெட்சுமி காந்தன் அந்த முதியவரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் மருத்துவமனையில் முதியவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story