திங்கள்சந்தை அருகே முதியவர் தற்கொலை

திங்கள்சந்தை அருகே முதியவர் தற்கொலை
பைல் படம்
மனைவி இறந்த சோகத்தில் விபரீதம் திங்கள்சந்தை அருகே முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.
குமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே பட்டரி விளையை சேர்ந்தவர் அருள்தாஸ் (60). இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மூத்த மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இளைய மகன் திருமணம் ஆகி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அருள்தாஸ் இளைய மகன் வீட்டில் வசித்து வந்தார். அருள்தாஸ் தனது மனைவி இறந்ததிலிருந்து மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி விஷமருந்து சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு, நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலையில் அருள்தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story