பெரியகுனிச்சியில் மூதாட்டி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சி

பெரியகுனிச்சியில் மூதாட்டி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சி

கோப்பு படம் 

திருப்பத்தூர் அடுத்த பெரியகுனிச்சி பகுதியில் மூதாட்டி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சி ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகுனிச்சி பகுதியில் மூதாட்டி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சி! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரிய குனிச்சி பகுதியைச் சேர்ந்த சென்னப்பன் மனைவி சுந்தரி வயது 63 இவர் தீராத வயிற்று வலியால் அவதி உற்று வந்தார்.

இந்த நிலையில் வயிற்று வலி அதிகமாகவே மனம் உடைந்த சுந்தரி வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி உள்ளார்

இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story