மறுவாழ்வு மையத்தில் மூதாட்டி தற்கொலை - காவல்துறையினர் விசாரணை

மறுவாழ்வு மையத்தில் மூதாட்டி தற்கொலை - காவல்துறையினர்  விசாரணை

காவல்துறை விசாரணை


செல்லியம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மறுவாழ்வு மையத்தில் மூதாட்டி தற்கொலை காவல்துறையினர் விசாரணை.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்லியம்பட்டி பகுதியில் அமைந்துள்ள மறுவாழ்வு மையத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதிமணி இவருக்கு வயது 63 இவர் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இவரது அறையில் இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனை அடுத்து மதிகோன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜோதி மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story